தோனியை பற்றி ஒரு பதிவு எழுதியே தீர வேண்டும்

No 7

ஞ்சள் நிறம்

சிங்கத்தின் முகம்


ஹெலிகாப்டர் ஷாட்


வேகமான ஸ்டம்ப் அவுட்



இப்படி தோனியை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.

கபில் டேவ்விற்கு பிறகு உலக கோப்பையை மீட்டு கொடுத்தவர் நம் மகேந்திர சிங் தோனி அவர்கள்.

அதுமட்டுமில்லாமல் பல கோப்பைகளை தன் நாட்டுக்காக வென்று தந்தவராகவும் இருக்கிறார்.

கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர் கொண்ட வரிசையில் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு அடுத்தபடியாக மகேந்திர சிங் டோனி அவர்களே இருக்கிறார்.

அவர் களத்திற்குள் வந்தால் எதிரணி வாயை பிளந்து கொண்டு பார்க்கும்.

அவர் பேட்டை சுழற்றினால் பந்து அரங்கத்தை விட்டு வெளியேறும்.

அவர் செய்யும் ஸ்டம்ப் அவுட்டிற்கு ஈடு இணை கிடையாது.

0.2 செக் இல் ஸ்டம்ப் அவுட் செய்யும் திறமை கொண்டவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆகச்சிறந்த கேப்டன். அவர் அரங்கத்திற்குள் வந்தால் அரங்கம் அதிரும். அதுவும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் என்றால் காது ஜவ்வு கிழியும்.அவர்உள்ளே நுழையும்போது பாட்சா.. பாட்சா..

வெற்றி கொடி கட்டு..

படையப்பா தீம்..

போன்ற பாடல்களை போட்டு தெறிக்க விடுவார்கள். அவர் உள்ளே வரும்போது அரங்கத்தில் ஏற்படக்கூடிய சத்தத்தை என் காதுகள் தாங்கவில்லை என்று மேற்கிந்திய தீவு வீரரான அன்ட்ரூ ரஸ்ஸல் அவர்கள் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நம் மகேந்திர சிங் டோனி. டிக்கெட் கலெக்டராக இருந்தவருக்கு கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள். அதில் விக்கெட் கீப்பர் பணியை மிகச்சிறந்த முறையில் செய்தார். அதேபோல் பேட்ஸ்மேன் தரப்பிலும், கேப்டன்ஷிப் செய்யும் விதத்திலும் மற்றும் தன்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் மூலமாகவும் அதிக சிக்ஸர்களை அடித்து தன்னை ஒரு கிரிக்கெட் சாம்பவானாக ஆக்கிக்கொண்டார். அவரின் அந்த ஹெலிகாப்டர் சாட் மிகவும் பேர் போன ஒன்றாக இன்றுவரை பார்க்கப்பட்டு வருகிறது.

ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல முறையில் பழகக் கூடியவராகவும் சக கிரிக்கெட் வீரர்களுடன் அன்பான முறையிலும் இணக்கமான முறையிலும் நடந்து கொள்பவராக மகேந்திர சிங் தோனி அவர்கள் இருந்து வருகிறார்கள். எதிரணி வீரர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து முறை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். கிரிக்கெட்டை தவிர அவர் விவசாயத்திலும் முழு ஈடுபாடு கொண்டவர் ஆகவே இருக்கிறார். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால் நிச்சயமாக தோனியை சொல்வதில் மாற்றம் இல்லை. இவர் எதிரணிகளை இலகுவாக வெல்வதிலும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதைக் கொண்டும் கேப்டன் கூல் என்ற பெயரை கொண்டு அழைக்கப்படுகிறார்.

2020இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 மேட்ச்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார். தோனியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எம் எஸ் தோனி தி லைஃப் ஸ்டோரி என்ற திரைப்படமும் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் விளையாடும் களத்தில் மௌனம் காப்பவராகவே தென்படுகிறார் இருந்தாலும் அவரின் ஆட்டம் உலக கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகவே இருக்கின்றது.

மகேந்திர சிங் தோனியை பற்றி சொல்வதில் தமிழ் தேனி பெருமை கொள்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்