இந்து மக்களின் குல தெய்வ வழிபாடு vs இஸ்லாமிய மக்களின் தர்கா வழிபாடு
குல தெய்வம் வழிபாடு vs தர்கா வழிபாடு
Welcome to HINDUISLAM tamil
இன்னைக்கு நாம குலதெய்வ வழிபாடு பண்ற இந்துக்கள் பற்றிய தற்கா வழிபாடு பண்ற முஸ்லிம் பற்றி பார்ப்போம்.
முதலில் குல தெய்வ வழிபாடு
இறந்த நம் முன்னோர்களை தெய்வம் ஆக்கி அவங்களுக்கு பொங்கல் வச்சு கிடா வெட்டி பூஜை செய்ற வழக்கத்துக்கு பேரு தான் குல தெய்வ வழிபாடு.
உதாரணமாக
குலதெய்வம் என்று கூறப்படும் தெய்வங்கள், அந்தந்தக் குடும்பங்களில், குழுவினரில், ஒவ்வொரு சாதிப் பிரிவினரில் தோன்றி, தங்கள் குலம் செழிக்கப் பாடுபட்டு, தியாகம் புரிந்து, இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள் ஆவர். குலதெய்வம் என்பது புராணத் தொடர்பு கொண்ட தெய்வங்களாக பெரும்பாலும் அமைவதில்லை. குலதெய்வம் என்பது நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முன்னோர்களாகவும், நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களையே நாம் குல சாமிகளாக போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். மதுரை வீரன், கருப்பண்ணசாமி, செல்லியம்மன் முதலான தெய்வங்களெல்லாம் எப்போதோ மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய நம் முன்னோர்களின் சிலைகளைக் குல தெய்வங்களாகப் போற்றி வழிப்படப்படுகிறது.
இதே போன்றதொரு செயல்களை தான் சில முஸ்லிம்களும் செய்து வருகின்றனர்.
இறந்து போன ஒரு நபரை புதைத்து அதில் சமாதி எழுப்பி அதன் மீது பச்சை போர்வை போர்த்தி அருகில் எப்போதும் பத்தி பொருத்தி பூஜை செய்து வழிபடுவதை தற்கா வழிபாடு என்று சொல்கிறோம்.
இதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் முஸ்லிம்கள் உருவத்தை வழிபடக்கூடாது என்ற ஒரு கொள்கையை படித்துக் கொண்டு அவர்களின் சமாதியை கடவுள் ஆக்கிக் கொண்டார்கள்.
அதற்கு நேர் மாறாக இந்துக்கள் தங்களுடைய முன்னோர்களின் சிலைகளை வடித்துக் கொண்டு அவர்களை தெய்வம் ஆக்கிக் கொண்டு வழிபடுகிறார்கள்.
இந்த இரண்டிலும் உண்மையான இறை வழிபாடு என்பது துளி கூட இல்லை.
இறந்த மனிதர்கள் இறைவனைப் போல் சக்தி கொண்டவர்கள் என்று நாம் எண்ணக்கூடாது.
இஸ்லாத்தில் தற்கா வழிபாடு ஒரு ஹராமான செயல் என்றாலும் சில முஸ்லிம்கள் அந்த ஹராமான செயலை செய்து வருகிறார்கள்.
பேய் ஓட்டுவதும் பிசாசு ஒட்டுவதும் இந்த இரண்டு இடங்களிலும் நடை பெறுகிறது.
அந்த இறந்தவர்களை வைத்து சில ஆசாமிகள் தங்கள் கல்லாவை கட்டி விடுகின்றனர்.
உண்டியலில் பணம் வசூலித்து அதை தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவு செய்து கொள்கின்றனர்.
உங்களை படைத்த இறைவன் மூலம் உங்களுக்கு ஒரு நல்லது நடந்து விட்டால் அதை அந்த இறந்த நபர்தான் எங்களுக்கு செய்தார் என்று எண்ணி கொள்கிறார்.
அவ்வாறு நடப்பதை அங்குள்ள போசரிகளும் அவ்லியாக்கலும் தங்களுக்கு சாதகமாக ஆக்கி கொண்டு சாமானிய மக்களின் பணத்தை புடுங்கி விடுகிறார்கள்.
எனவே எனது அன்பார்ந்த நண்பர்களே படைப்புகளை விட்டு விட்டு நம்மை படைத்த இறைவனையே நாம் வணங்க வேண்டும்.
இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.
Subscribe செய்து கொள்ளவும்
%20(1).jpeg)
கருத்துகள்