இந்தியாவில் பிறந்த நபிகள் யார் என்று பார்ப்போம் வாருங்கள்

முதலில் முதல் மனிதன் யார் என்று பார்ப்போம். யாரிடமாவது உலகில் முதல் மனிதன் யார் என்று கேட்டால்,அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் ஆயினும் உலகில் முதல் மனிதன் ஆதாம் என்பார்கள்.


யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற மதங்களில் முதல் மனிதனை ஆதாம் என்று அழைக்கின்றார்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி யாரும் அழைக்கப்படுவதில்லை. பதிலாக ஆதாம் என்ற மனிதனை ஆதி சிவன் என்ற கடவுளாகவே எண்ணுகிறார்கள். ஆதி என்ற வார்த்தையிலும் ஆதாம் என்ற வார்த்தையிலும் ஓர் ஒற்றுமை உள்ளது. மற்ற மதத்தவருக்கு ஆதாம் என்பவர் முதல் மனிதன் என்றால் இந்து மதத்தினருக்கு சிவன் என்பவரே முதல் மனிதனாக அல்லது கடவுளாக இருக்க வேண்டும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஆதாம் குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஆதி சிவன் மற்றும் பார்வதிக்கும் மூன்று பிள்ளைகள் என சிவனின் குடும்பமும் ஐந்து நபர்களைக் கொண்டதுதான். ஆதாம் ஏவாள் காயின் ஆபேல் சேத் என சொல்லப்படும் இந்த ஐந்து நபர்கள் தான் ஆதி சிவன் பார்வதி விநாயகர் முருகன் ஐயப்பன் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் கிறிஸ்தவம் யூத மதத்தில் ஆதாம் என்பவர் முதல் நபியாக பார்க்க படுகிறார்.அதன் பிறகு சேத் நபியாக பார்க்க படுகிறார். ஆபேல் மற்றும் காயின் நபியாக சொல்லப்படவில்லை. அதே நேரத்தில் அவர் காலத்தில் வாழ்ந்த இத்ரீஸ் என்பவர் நபியாகவே பார்க்கப்படுகிறார்.

எனவே


ஆதாம்=ஆதிசிவன்

ஏவாள்=பார்வதி

அபெள்=பிள்ளையார்

காயின்=முருகன்

சேத்=சாஸ்தா என்ற ஐயப்பன்

இத்ரிஸ்=அகஸ்தியர்


என்றே விளங்குகிறது.

இன்னும் ஒரு ஒற்றுமையை பார்ப்போம்.


இலங்கையில் சிவனொலி பாத மலை என்ற ஒரு மலை கோவில் உள்ளது.அந்த கோவில்க்கு ஆடம் பீக் என்ற பெயரும் உள்ளது.



அங்கே அவர்களின் காலடி தடம் இருப்பதாக சொல்ல படுகிறது. அதே நேரத்தில் பௌத்தர்களின் ஆட்சி இருக்கும் காரணத்தினால் அந்த மலையில் உள்ள கால் அடித் தடத்தை புத்தரின் காலடித்தடம் என்றும் கூட சொல்கிறார்கள்.


இங்கு நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது, முதல் மனிதன் ஆதாம் அவர்களை இந்தியாவில் ஒரு பகுதியில் இறக்கியதாகவே சொல்கிறார்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவுடன் லெமூரியா கண்டம் இணைந்து தான் இருந்தது. அதே நேரத்தில் ஆதி சிவனும் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றே அழைக்கப்படுகிறார்.


எனவே இரு வேறு பெயர்களைக் கொண்ட அந்த ஒரே நபர் இந்தியாவில் இறக்கப்பட்டதாகவே அறிய முடிகிறது.

இப்போது நாம் கேள்விக்கு வருவோம்

முதல் நபி முதல் மனிதன் அவர் இந்தியாவில் இறக்கப்பட்டவராகவே இந்தியாவில் பிறந்தவராகவே அறியப்படுகிறார்.

மேலும்  இந்தியாவில் பிறந்த நபியாக சேத் நபி அறியப்படுகிறார். அதே நேரத்தில் அகஸ்தியர் என்று சொல்லக்கூடிய இத்ரீஸ் நபியும் இந்தியாவில் பிறந்தவர் தான்.

எனக்குத் தெரிந்த வகையில் இந்த மூன்று நபிமார்கள் தான் இந்தியாவில் பிறந்த நபிமார்களாக அறியப்படுகிறார்கள்.

இவர்களை பற்றிய விளக்க காணொளிகள் தமிழ் தேனி யூடியூப் சானலில் உள்ளது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்