என் கற்பனையில் தோன்றிய உலகம் முழுக்கதை எழுதியவர் வேல்முருகன்
என் கற்பனையில் தோன்றிய பூமியின் தோற்றம்.. எனது பெயர் வேல்முருகன்.ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தேன்.நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை பற்றிய சிந்தனை செய்து கொண்டிருந்தேன். இந்த பூமி எப்படி எவ்வாறு யாரால் உருவாகி இருக்கும் என்ற சிந்தனை என்னை அழுத்தி கொண்டிருந்தது.மெதுவாக கண்களை மூடி யோசித்து கொண்டு இருந்தேன்.தூக்கமும் என்னை ஆட்கொண்டுவிட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு மெதுவாக கண்களை திறந்து பார்த்தேன்.என்னை சுற்றிலும் கண்களுக்கு எரிச்சல் இல்லாத புகையாக இருந்தது.அங்கு யாருமே கிடையாது.நான் ஒரு அழகிய காட்டில் இருந்தேன்.பறவைகளின் சத்தம் மென்மையாக இருந்தது.பெரிய மரங்கள் சிறிய செடிகள் என பச்சை பசேல் என்று இருந்தது. அங்கங்கே அழகிய பூக்களும் பூத்து இருந்தது.இந்த பூக்கள் எல்லாம் நான் பார்த்தது கூட கிடையாது.யாருடைய கால் தடமும் இல்லாத இடத்தில் நான் சுற்றிலும் பார்த்தவாறு நடந்து சென்றேன்.பசுமை என் மனதுக்கு ஆனந்தத்தை கொடுத்தது.இருந்தாலும் நான் எங்கு இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.நடந்து கொண்டே இருந்தேன்.காட்டை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை.வெகுநேரம் ஆகியும் என் கண்களுக்கு வீடோ மனிதனோ புலப்படவில்லை.நடந்து கொண்டே இருந்ததால் களைப்பாகி போனது.அப்போது ஒரு நீர்வீழ்ச்சி ரம்மியமாய் விழுந்து கொண்டிருந்தது.அதன் அருகில் சென்று என் களைப்பை போக்கிகொண்டேன்.பிறகு மீண்டும் நடக்க தொடங்கினேன்.அந்த காட்டை விட்டு வெளிய வந்த பாடில்லை.ஒரு உயரமான மரத்தில் ஏரி சென்று பார்க்கலாம் என்று நினைத்து மரத்தில் ஏறினேன்.கண்கள் எட்டும் தூரம் வரையிலும் காட்டை தவிர வேறு ஏதும் கண்களில் படவில்லை.நான் இப்போது எந்த காலத்தில் இருக்கிறேன்.இப்போது நேரம் என்ன என்று கூட தெரியாமல் இருந்தது.மீண்டும் நான் நடக்க ஆரம்பித்தேன்.நான் இருக்கும் இந்த காடு சொர்க்க சோலையாக காட்சி அளித்தது.அப்போது தூரத்தில் ஒரு சத்தம் கேட்டது.அருகில் சென்று போய் பார்த்தேன்.அங்கு எனக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது.தன் உடம்பை இலைகளால் மறைத்து பெண் ஒருவள் நின்று கொண்டு இருந்தாள்.அவள் ஒரு கிழங்கை பறிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.அந்த பெண்ணை பார்க்கவும் மனதிற்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.அங்கு சென்று நான் எங்கு இருக்கிறேன் என கேட்கலாம் என்று அருகில் சென்றேன்.நான் அந்த பெண்ணை அழைத்து பார்த்தேன்.அவளுக்கு நான் சொல்லியது எதுவும் கேட்கவில்லை.நான் இருப்பதையும் கூட அவளால் உணர முடியவில்லை.இந்த செயல் என்னை திகைப்படைய செய்தது.சட்று நேரத்தில் அங்கு இருந்து தான் பரித்த கிழங்கோடு அவள் நடக்க ஆரம்பிதாள். அவள் எங்கு செல்கிறாள் என்று பார்பதற்காக நானும் அவளை பின் தொடர்ந்து சென்றேன்.அங்கு எனக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காண கிடைத்தது.அங்கு அழகிய இரண்டு இரட்டை குழந்தைகள் இருந்தது.அவர்கள் அங்கும் இங்குமாக துள்ளி திரிந்து விளையாடி கொண்டிருந்தார்கள்.அந்த பெண்ணை பார்த்ததும் அவள் பக்கதில் வந்து ஒட்டி கொண்டார்கள்.அவள் கிழங்கை அவர்களுக்கு சாப்பிட கொடுத்தாள்.அந்த சிறுவர்களாலும் நான் இருப்பதை உணர முடியவில்லை.இருந்தாலும் அவர்கள் படும் சந்தோசத்தை கண்டு நான் ஆனந்தம் அடைந்தேன்.அவர்கள் இருந்த அந்த பகுதி பெரிய கற்களால் சூழப்பட்டு இருந்தது.இது அவர்கள் வாழும் வீடாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன்.அதன் பின் இருள் சூளபோகும் நிலை வந்தது. அந்த பெண் யாரயோ எதிர்பார்த்து எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தாள் நானும் மரத்தடியில் அமர்ந்து இருந்தது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் அங்கு கட்டு கோப்பான உடல் அமைப்போடு ஒரு ஆண் வந்துகொண்டு இருந்தான். அவன் கையில் தான் சேகரித்த உணவை வைத்திருந்தான்.அவனை பார்த்ததும் அந்த பெண்ணிற்கு அளப்பரியாத சந்தோசம்.இருவரும் கட்டி அணைத்து கொண்டார்கள்.பின்பு அவன் கொண்டு வந்த உணவை பகிர்ந்து சாப்பிட தொடங்கினார்கள்.அந்த ஆணின் கண்ணுக்கும் நான் தெரியவில்லை.பெரும் வியப்பு என்னை சூழ்ந்து கொண்டது.அவர்கள் சாப்பிடுவதை பார்த்து எனக்கும் பசி எடுக்க தொடங்கியது.சற்று தூரத்தில் இருந்த மரத்தின் பழத்தை கொய்து நானும் சாப்பிட்டேன்.வந்து பார்க்கும்போது அவர்கள் அனைவரும் தூங்கி விட்டார்கள்.பின்பு நானும் செய்வதறியாத திகைத்து அந்த மரத்தின் அடியில் தூங்க சென்றேன்.வானத்தில் உள்ள நிலவின் வெளிச்சமும் அந்த காட்டின் சப்தமும் என்னை மெய் சிலிர்க்கவைத்தது.சற்று நேரத்தில் நானும் தூங்கிவிட்டேன். சிறிது நேரத்திற்கு பிறகு தூக்கத்தில் இருந்து விளித்து பார்த்த போதுதான் தெரிந்தது இதுவரை கண்டது எல்லாம் கனவு என்று.என் கனவில் தோன்றிய காட்சிகள் அனைத்தும் ஆதியில் வாழ்ந்த மனிதர்களை பற்றி என்று புரிந்து கொண்டேன்.பின்பு நான் வீட்டிற்கு சென்றேன்.அங்கு எனது அம்மா உணவு சமைத்து கொண்டிருந்தார்கள்.அலமாரியில் உள்ள diary எடுத்தேன்.நான் கண்ட காட்சிகள் அனைத்தையும் எழுதினேன்.இது அறையாண்டு விடுமுறை என்பதால் எனக்கு அதிக நாட்கள் இருந்தது.இந்த விடுமுறைக்குள் எனது இந்த புத்தகத்தை முடிவு செய்திட வேண்டும் என எண்ணினேன்.ஆனால் அதே கனவு மீண்டும் வருமா என சந்தேகப்பட்டேன். நாம் மனதில் ஆழமாக நினைப்பதுவே கனவாக வரும் என்று ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.அதனால் என் சிந்தனைகள் அனைத்தும் உலகம் உருவானதையே என்னிகொண்டிருந்தது. மறுநாள் அதே மரத்தடிக்கு சென்றேன்.அதே சிந்தனையுடன் எனது கண்களை மூடினேன்.சற்று நேரத்தில் கண்களை திறந்து பார்த்தேன்.நான் பார்த்த அந்த இரண்டு சிறுவர்களும் சற்று வளர்ந்து இருந்தார்கள்.அவர்களின் கற்களால் ஆன வீடு கொஞ்சம் மாற்றி அமைக்க பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் அங்கு இன்னும் ஒரு இரட்டை பெண் குழந்தைகள் இருந்தது.அவர்களுக்கு மீண்டும் ஒரு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என எண்ணி கொண்டேன்.வழக்கம் போல் அந்த ஆண் மகன் உணவு தேடி சென்று இருப்பார் என தோன்றியது. நான் அங்கு நின்று கொண்டு அவர்களில் செயல்களை கவனித்து கொன்டு இருந்தேன். அப்போது அந்த இருவர்களும் ஒருவருக்கொருவர் சண்டை இட்டு கொண்டிருந்தார்கள்.அருகில் சென்று போய் பார்த்தேன்.அவர்களின் ஒருவனிடம் ஒரு பழம் இருந்தது. அதை சாப்பிட சண்டை போட்டு கொண்டனர்.பின்பு அவர்களின் அம்மா அந்த பலத்தைக் சரியாக பகிர்ந்து அளித்தாள். அந்த அடர்ந்த காட்டில் ஒரே ஒரு குடும்பம் தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.அதாவது பூமியில் வாழ்ந்த முதல் மனிதர்களைதான் இப்போது பார்த்து கொண்டிருகிறேன்.அதில் மிகபெரிய ஆச்சர்யம் என்ன என்றால் அவர்கள் தமிழ் மொழியைப் போன்று பேசிக்கொண்டனர்.பழத்தை சாப்பிடு,மரம், மிருகம்,பறவை,செடிகள் என்ற வார்த்தைகள் எல்லாம் அவர்கள் பேசிகொண்டார்கள்.அதன் பிறகு சூரியன் தன்னை மறைத்து கொண்டிருக்கும் வேலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தது.அந்த ஆண்மகன் வேகமாக ஓடி வந்தான் .அவனின் பின்னால் ஒரு புலி ஒன்று அவனை துரத்தி வந்தது.அதை பார்த்ததும் நானும் அதிர்ச்சி அடைந்தேன். அதை புரிந்து கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டனர்.அந்த ஒரு குழந்தையை தவிர.ஆம் அந்த பெண் குழந்தைகளில் ஒருவர் வெளியே மாட்டிகொண்டாள்.நானும் பயத்தில் உறைந்து போய்விட்டேன்.அந்த புலி அந்த குழந்தையை நோக்கி கர்ஜித்து கொண்டே அருகில் சென்றது.திரும்பி பார்த்த அந்த ஆண் மகன் ஆபத்தை புரிந்து கொண்டான்.அந்த புலி அந்த குழந்தையை நோக்கி பாய்ந்தது.அவள் தந்தையும் புலியை நோக்கி பாய் ந்தான். அந்த புலியிடம் கட்டி புரண்டு சண்டை போட துவங்கினான்.அந்த காட்சி மிகவும் பிரமிப்பை உண்டாக்கியது. புலி தன் நகத்தை கொண்டு அவனை கிழித்து கொண்டிருந்தது.இருந்தாலும் அவன் புலியோடு திடனாக சண்டை போட்டன்.அப்போது கத்தி போன்ற ஒரு கல்லை எடுத்து புலியின் மண்டையில் வேகமாக அடித்தான்.புலியின் துள்ளல் நின்று போனது.பின்பு அந்த ஆயுதத்தால் மீண்டும் மீண்டும் அடித்து புளியை கொன்றே போட்டுவிட்டான்.,அவன் குடும்பம் பயந்தவாறு வெளியே வந்தார்கள்.பின்பு அந்த புலியை அப்புற படுத்திவிட்டான்.அந்த கல்லையும் அவன் கைகளில் வைத்து கொண்டான்.மனிதன் பயன்படுத்திய முதல் ஆயுதம் கல் என்பதை புரிந்து கொண்டேன்.சற்று நேரத்திற்கு பிறகு இருளும் சூழ்ந்தது.அனைவரும் தூங்க சென்று விட்டார்கள்.அந்த ஆண் மகன் மட்டும் முழித்தவாறு தன் குடும்பத்திற்கு பாதுகாப்பாக அமர்ந்து இருந்தான்.அதன் பிறகு நானும் தூங்க சென்றேன். சட்று நேரத்திற்கு பிறகு ஒரு நீர் துளி என் கன்னத்தில் விழுந்தது.கண் விளித்து பார்த்தேன்.நான் இருந்தது அதே காட்டில் தான்.இருள் சூழ்ந்த நிலையில் தான் இருந்தது.மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தது.வானில் மேகங்கள் இருள் சூழ்ந்து காணப்பட்டது.பெரிய மலை வர போகிறது என்று நினைத்தேன்.அப்போது ஒரு அழகிய மானை பார்த்தேன்.அது ஒரு காய்ந்த மரத்தின்அருகே நின்று இருந்தது.நான் சற்றும் எதிர்பாராத நிலையில் வானில் இருந்து மின்னல் பெரிய சப்தத்துடன் விழுந்தது.அந்த மின்னல், அந்த காய்ந்த மரத்தின் மீதும் அந்த மானின் மீதும் பட்டதால் மான் சிறிது கருகிய நிலையில் இறந்து போனது.அந்த ஆண் மகன் பதட்டத்தில் எழுந்து விட்டான்.அவன் இடிக்கு பயந்தவனாக காணப்பட்டான்.பின்பு அவன் குகைக்குள் சென்று பதுங்கிகொண்டான்.பின்பு பலமான காற்று அடித்தது.மேகமும் களைந்து விட்டது. பகல் வெளிச்சமும் சற்று கண்ணுக்கு தெரிந்தது.வீசும் மென்மையான காற்றில் ஒரு வித வாசனை வந்தது.அந்த வாசனை எனக்கு பசியை நியாபக படுத்தியது.அது அந்த மானின் வாசனைதான் என்று புரிந்து கொண்டேன்.அந்த வாசனை எனக்கு மட்டும் அல்ல அந்த ஆண் மகனுக்கும் அடித்திருக்கும் போல.அதை நுகர்ந்த வண்ணம் அது எங்கிருந்து வருகிறது என தேடி கொண்டிருந்தான்.பின்பு அந்த மானை பார்த்து விட்டான் .நானுன் அருகில் சென்று பார்த்தேன்.கருகிய மானின் உடலில் இருந்து சிரிது புகை வந்து கொண்டிருந்தது.அதை தொட முயற்ச்சிதான் சூடாக இருந்ததால் கையை எடுத்து கொண்டான்.எரியபட்ட மரத்தின் கங்குகள் அங்கு சிதறி கிடந்தன.அதை அவன் பார்க்காதவன் போல் பார்த்து கொண்டிருன்தான்.இது எப்படி வந்தது என்று யோசனையில் இருந்தான்.சிறிது நேரத்தில் அந்த கங்கு அமர்ந்து போனது.பின் அந்த மானை வெளியில் இழுத்து வந்தான்.அதை சாப்பிட முயற்சி செய்தான் மானின் ஒரு சதை பகுதியை பிய்த்து சாப்பிட தொடங்கினான். அவன் சாப்பிடுவதை பார்த்து நாக்கில் எச்சில் ஊரியது.அவனும் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான். பின் அந்த மானின் மாமிசத்தை கையில் எடுத்துக்கொண்டு நடந்தான்.நானும் பின் தொடர்ந்தேன். அவன் குடும்பத்திற்கு அவன் மாமிசத்தை பஹிர்ந்துகொடுத்தான்.முதன் முறையாக அவர்கள் மாமிசத்தை சாப்பிடுவார்கள் என எண்ணிக்கொண்டேன்.பின்பு அந்த மான் இருந்த இடத்திர்க்கு அவளை கூட்டி சென்றான்.மான் இருந்த இடத்தையும் வானத்தை நோக்கி சுற்றி காட்டினான்.அதன் பிறகு அந்த கரிக்கட்டையை கையில் எடுத்து காண்பித்தான்.அவன் கூறியது யாவும் அவளுக்கு புரிபடவில்லை.அவனோ இது எவ்வாறு நடந்திருக்கும் என்று யோசனைக்குள் சென்று வானத்தையே பார்த்துகொண்டிருந்தான்.அன்றுவரையில் பழங்களையும் கிழங்குகளையும் சாபிட்டு கொண்டிருந்த அவன் மாமிசத்தின் சுவையை புரிந்து கொண்டு யோசிக்க தொடங்கினான். மதியவேளையில் சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்தது.அந்த ஆண் மகன் காட்டில் உணவு தேடி சென்றான்.நானும் அவனை பின் தொடர்ந்தேன். அவனோ நெருப்பை எதிர் பார்ப்பவன் போல வானத்தையே பார்த்து கொண்டு நடந்தான்.அப்போது அந்த சம்பவம் நடந்தது.சருகலான மலையில் பாறை ஒன்று உருண்டு வந்தது.அந்த கல் உருளும் போது பாறையுடன் உரசும் போது காய்ந்த இலைகளால் நெருப்பு உண்டானது.அதை நாங்கள் இருவரும் தூரமாக இருந்து பார்த்து கொண்டிருந்தோம்.அவன் எதையோ புரிந்தவன் போல் என் கண்ணில் பட்டான்.அவன் அருகில் இருந்த ஒரு பாறையை பார்த்தான்.மற்றொரு பெரிய கல்லை எடுத்து அந்த பாறையின் மீது மோதவிட்டான்.எதுவும் நடக்க வில்லை .மீண்டும் மீண்டும் அதை செய்தவனாக இருந்தான்.கல்லோடு கல் உரசினால் தீ பிடிக்கும் என்பதை புரிந்து கொண்டுதான் அதை செய்து கொண்டிருந்தான்.ஆனால் நெருப்பு வந்த பாடில்லை.பின்பு கலைத்து போய் அங்கு இருந்து நகர்ந்தான்..நானும் அவனையே தொடர்ந்தேன்.அதன் பின் அவன் சில கிழங்குகளும் பழங்களையும் பறித்து கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.வழியில் மாமிசமாக சாப்பிட்ட மானை போல் ஒரு மானை பார்த்தான்.அனால் அந்த மான் இவனை பார்த்ததும் துள்ளி குதித்து ஓடிவிட்டது.அவன் அதை பின் தொடர்ந்து போயும் அவனால் பார்க்கமுடியவில்லை.அதன் பின் அவனது வீட்டை வந்தடைந்தான்.நானும் வந்து சேர்ந்தேன்.இரவு நேரம் வந்தது.அவன் கொண்டு வந்த உணவுகளை எப்பவும் போல் குடுபத்திற்கு பகிர்ந்தளித்தான்.நானும் ஒரு பலத்தை சாப்பிட்டு கொண்டிருந்தேன்.சூரியன் தன்னை முழுமையாக மறைத்ஹிருன்தது.பின் அனைவரும் தூங்க ஆரம்பித்தார்கள்.அந்த ஆண் மகனை தவிர.நானும் லேசாய் கண்களை மூடினேன். சற்று நேரத்திற்கு பிறகு கண்களை விரித்து பார்த்தேன்.கனவில் இல்லாமல் இருந்தது தெரிந்தது.மிகவும் பசியாய் இருந்தது.நேரமும் சாயங்காலம் ஆகி இருந்தது.வீட்டை நோக்கி சென்றேன்.எனது அம்மா என்னை கோவத்தோடு வரவேற்றினார்கள்.மதியம் சாப்பிட வராமல் எங்கே போயிருந்தாய் என கேட்டார்கள்.நண்பனின் வீட்டில் இருந்தேன் என்று சமாளித்துவிட்டு எனது அறைக்கு சென்றேன்.பின்பு எனது அம்மா இரவு உணவை கொண்டு வந்து சாப்பிட சொன்னார்கள்.நானும் சாபிட்டு விட்டு எனது diary யை எடுத்து நான் கண்ட கனவுகளை எழுத தொடங்கினேன்.பகல் வேலையில் நன்றாக தூங்கி இருந்ததால் எனக்கு தூக்கம் வர வில்லை.நான் தூங்காமலேயே மறு நாள் வந்துவிட்டது.பின்பு எனது வேலைகளை முடித்து கொண்டு,அம்மாவிடம் நண்பனை பார்பதகவும் மதியம் அங்கேய சாப்பிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பி சென்றேன்.அந்த மரத்தடியை வந்து சேர்த்தேன்.இரவு முழித்து இருந்ததால் தூக்கம் கண்ணை கட்டி கொண்டிருந்தது.பின் இதற்கு முன் வந்த கனவுகளையும் நினைத்து கொண்டு தூங்க ஆரம்பித்தேன்.சிறிது நேரத்தில் கண் விளித்து பார்த்த போது. அதே காட்டில் நான் இருந்தேன்.அங்கே விறகு கூட்டப்பட்டு நெருப்புகள் எரிந்து கொண்டிருந்தது.காட்டில் வசிக்கும் கோழிகளை பழக்கம் செய்து வைத்தனர்.அது தான் குஞ்களோடு இருந்தது.அவர்கள் வசிக்கும் இடம் சற்று விரிவடைந்து இருந்தது.எப்போதும்போல் அவர்கள் கண்களுக்கு நான் தெரியவில்லை.அருகில் சென்று பார்த்தேன். அந்த ஆண்மகன் கற்களை உறைசி நெருப்பை பட்ற வைத்து கொண்டிருந்தார்.இந்த சிந்தனை இவர்களுக்கு எப்படி தெரிந்தது இருக்கும் என்று அறிந்க்கொண்டேன்.அங்கு இருந்த அந்த இரட்டை ஆண்களுக்கும் இரட்டை பெண்களுக்கும் ஒருவரை ஒருவர் திருமணம் முடித்து இருப்பது போல் இருந்தது. அவர்களுக்கு ஒரு ஒரு குழந்தையும் பிறந்து இருந்தது.அந்த குடும்பம் சிறிது நாகரீக வளர்ச்சி அடைந்து இருந்தது.அந்த மகன்களில் ஒருவன் அப்போது கையில் வேட்டையாடிய மான் ஒன்றை வைத்திருந்தான்.அதை தன் தாயிடம் கையில் குடுத்தான்.அப்போது புரிந்து கொண்டேன்.அவர்கள் வேட்டையாடவும் கற்று இருந்தார்கள்.மற்றொருவன் புலியின் தோலை உடையாக அணிந்திருந்தான்.அந்த குடும்பம் அழகாய் காட்சி அழைத்தது.அப்போது ஒரு பெரும் சப்தம் கேட்டது.பறவைகள் எல்லாம் படபடவென பறந்தது.அனைவரும் உற்று கவனித்தார்கள்.சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அந்த பேரலை காட்டை பிரித்து கொண்டு வேகமாய் வந்தது.அதை கண்டு அலறி அடித்து ஓட தொடங்கினார்கள்.நானும் அருகில் இருந்த மரத்தில் ஏரி கொண்டேன்.அந்த தண்ணீரில் மகன்களில் ஒருவன் சிக்கி கொண்டான்.அவரை காப்பாற்ற மற்றும் ஒருவன் நீரில் குதித்து அவனை காப்பற்றினான்.பெரும் போரட்டத்திற்கு பிறகு ஒருவழியாக அனைவரும் தப்பிவிட்டார்கள்.அதன் பிறகு அவர்களின் வீடு நீரில் மூழ்கியது.பின்பு அனைவரும் அங்கிருந்து நடக்க தொடங்கினர்.கோழிகளையும் கையில் வைத்திருந்தனர்.நானும் அவர்களை பின் தொடர்ந்தேன்.சிறிது தூரத்திற்கு பிறகு அடர்த்தியாக இருந்த பெரிய மரங்களுக்கு நடுவில் நடந்து சென்றார்கள்.சூரியன் தன்னை மறைத்து கொண்டிருந்தது.அனைவரும் அங்கேயே தங்க நினைத்து அமர்ந்து விட்டனர்.அவர்களின் குழந்தைகள் அழதொடங்கியது.தாய் இருவரும் அந்த குழந்தைகளை பசி அமர்த்தினார்கள்.அந்த நேரத்தில் குடும்ப தளைவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நீருக்கு பயந்து மரத்தின் மேல் வேர்களையும் கொடிகளையும் இணைத்து வீட்டை கட்டினார்கள்.தூகனாக் குருவி கூடு கட்டுவதை போல் அவர்கள் மரத்தில் வீடு கட்டி இருந்தது மிகவும் ரம்மியமாய் இருந்தது.பிறகு அந்த குடும்பம் மரத்தின் மேல் சென்று தங்கினார்கள்.நானும் லேசாக கண்கள் மூடினேன்.ஒருவேளை பலத்த காற்று அடித்தால் அவர்களின் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்தவாறு தூங்கி விட்டேன்.விளித்து பார்த்த போது அந்த மரத்தடியில் இருந்து எழுந்தேன்.பின்பு எப்பவும் போல் வீட்டிற்கு சென்று நான் கண்ட காட்சிகளை எழுதி வைத்தேன். மறுநாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு மரத்தடிக்கு சென்று மீண்டும் கனவை எதிர்பார்த்து தூங்கினேன்.கனவும் வந்தது.விளித்து பார்த்த போது ஒரு சமமான நிலபரப்பை பார்த்தேன்.அந்த நிலா பரப்பு சுற்றிலும் காடுகள் சூழ பட்டு இருந்தது.அங்கு அடைக்க பட்டும் கட்ட பட்டும் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன.அது அவர்களுடைய வீடுதான்.மரத்தில் கட்ட பட்ட வீடுகள் நான் நினைத்தவாறு பலத்த காற்றினால் தான் சேதம் அடைந்து இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.கட்டுவதற்கும் அடைப்பதற்கும் தெரிந்தது இருந்ததால் அது போன்று வீட்டை கட்டி இருப்பதையும் புரிந்து கொண்டேன்.இந்த முறை ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.அந்த குடும்பம் ஒரு ஊராக மாறி இருந்தது.அனைவரும் உடை அணித்து இருந்தார்கள்.நெருப்பை உண்டாகி உணவை சமைக்க தெரிந்தது இருந்தனர்.தனி குடும்பம் குடும்பம் ஆகவும் இருந்தார்கள்.வேட்டை,உணவு சேகரிப்பு,உடை,குழந்தைகள் என அனைத்திலும் நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தனர்.ஒவ்வொரு குடும்பம் ஆக சென்று பார்த்தேன்.அவர்களின் வாழ்க்கை முறை கண்டு மிகவும் வியப்படைதேன்.இந்த முறையும் அவர்களின் ஒருவர் கண்களுக்கு குட நான் புலப்படவில்லை.அப்போது முதன் முதலில் கண்ட அந்த ஆண் மகனை பார்த்தேன்.கொஞ்சம் வயதானவராக காணப்பட்டாலும் அப்போதும் திடனகதான் இருந்தார்.எனது கணிப்பின் படி அவருக்கு ஒரு ஐந்நூறு வயதுக்கு மேல் தான் இருக்க வேண்டும்.அவரின் மகன்களும் அது போலதான் இருந்தார்கள்.இது எப்படி சாத்தியம் என்று நினைக்கும் போது,அங்கு காற்று மாசுபாடு இல்லை.அங்கு போதை பழக்கம் இல்லை.சத்தான உணவுமுறை இதுவெல்ளாம்தான் காரணம் என்பதை புரிந்து கொண்டேன்.அப்போது ஒரு பெண்ணின் அழுகை சப்தம் கேட்டது.அங்கு இருந்தவர்கள் அந்த பெண்ணை பார்க்க அருகில் ஓடினார்கள்.நானும் அருகில் சென்றேன்.கர்பமான அந்த பெண் பிரசவ வழியால் துடித்து கொண்டிருந்தாள்.அந்த பெண்ணை நான் முதன் முதலில் கண்ட பெண் அவளின் வயிற்ரை பிடித்து கொண்டிருந்தாள்.அந்த நேரத்தில் வானை முட்டும் அளவிற்கு இருந்த ஒரு மரம் சாய்ந்தது.அதை அனைவரும் பயத்தோடு பார்த்தார்கள்.பின்பு அதை பார்த்துவிட்டு வரசொல்லி ஆண்மகன்களை அனுப்பி விட்டனர்.அவர்கள் கையில் ஆயுதத்தோடு அந்த இடத்தை நோக்கி போனார்கள் நானும் பின் தொடர்ந்தேன்.அங்கு ஒரு பெரிய யானை ஒன்று மதம் பிடித்த நிலையில் நின்று இருந்தது.அந்த யானை மிகவும் ஆக்ரோசமாக காணப்பட்டது.அருகில் சென்ற ஒருவனை தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது.மற்றொருவன் பலமான சப்தம் போட்டு அதை விரட்ட நினைத்தான்.அவனையும் விட்டு வைக்காமல் தூக்கி விசியது.மற்றொருவனை யானை விரட்டியதால் ஒரு மராத்தில் ஏரி கொண்டான்.யானையும் அந்த மரத்தை நோக்கி வந்தது.மரத்தில் இருந்தவன் நீளமான உசியான கல் ஆயுதம் ஒன்றை வைத்திருந்தான்.யானை மரத்தை ஆட்ட தொடங்கியது.மேல் இருப்பவன் ஆயுதத்தை தயார் நிலையில் வைத்து இருந்தான்.எதிர்பார்க்காத வேலையில் மரத்தில் இருந்து குதித்து யானையின் கழுத்தில் அந்த ஆயுதத்தை சொருகினான்.அவன் யானை மேல் நின்று இருந்தான்.அந்த காட்சி மிகவும் வியப்பை எற்படுதியது.இருந்தும் யானை அலறி கொண்டு அவர்கள் வசிக்கும் வீட்டை நோக்கி ஓடியது.பிரசவ வலியால் துடித்து கொண்டு இருந்த அந்த பெண்ணை சுற்றயுள்ள அனைவரும் யானை கண்டு ஓடினார்கள்.யானையின் மேல் இருந்தவன் மனைவிதான் அவள்.தனது காலால் யானை மீது குத்தப்பட்ட ஆயுதத்ததை அழுத்தினான்.யானை அலறியவாறு அந்த கர்ப்பிணி பெண்ணின் அருகில் வந்து மடிந்தது.பெரும் யானையை கொன்றுவிட்டான் அந்த ஆண்மகன்.அதே வேலையில் அந்த பெண்ணுக்கு குழந்தயும் பிறந்தது.அந்த குழந்தையை அவன் தூக்கி பார்த்தான்.ஆண் குழந்தை அது.அந்த குழந்தையின் முகம் அவர்களை போல் இல்லாமல் அழகாய் இருந்தது.யானை கொன்ற சந்தோசமும் குழந்தை பிறந்த சந்தோசத்திலும் அங்கு இருந்த அனைவரு ஆட தொடங்கினார்கள்.நானும் அவர்களுடன் சேர்ந்து ஆடினேன் பிறகு இரவு வேளை ஆனது.அனைவரும் நெருப்பை மூட்டி சுற்றி அமர்ந்து இருந்தார்கள்.சிறுவர்கள் இருவர் யானையின் கறியை பிய்த்து கொண்டிருந்தார்கள்.சிலர் அதை வேக வைத்து கொண்டிருந்தார்கள்.அதன் பிறகு அனைவரும் உறக்கதிற்கு சென்றார்கள்.நானும் தூங்க சென்றேன்.அந்த நேரத்தில் குழல் இசைப்பது போன்று சப்தம் வந்தது.அந்த இசை, இசை இல்லாமல் இசைத்தது.உடனே விளித்து கொண்டேன்.அந்த சப்தம் அங்கு இருந்த ஒருவன் காதில் விழுந்தது.அவனும் அதை கேட்டவாறு நடந்தான்.நானும் அவனுடன் சென்றேன்.அங்கு வண்டுகளினால் துளையிடப்பட்டு உள்ள மூங்கிலில் காற்று புகுவதால் அந்த சப்தம் கேட்டது.அந்த சப்தம் அவனை மயக்கியது.பின்பு வேகமாய் சென்று தனது மனைவியையும் அழைத்து வந்து அதை கேட்க செய்தான்.இருவரும் இசையில் மயங்கினார்கள்.அந்த இசை எனக்கு தூக்கத்தை ஏற்படுத்தி தூங்கிகவிட்டேன். விளித்து பார்த்த போது மரத்தடியில் இருந்தேன்.பின்பு வீட்டுக்கு சென்றேன்.அம்மா இந்த முறையும் மிகவும் கோவமாக இருந்தார்கள்.வர வர சரி இல்லாமல் போகிறாய் என்று சொன்னார்கள்.காலைல போன சாய்ந்தரம் தான் வருகிறாய் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டார்கள்.அம்மாவின் கோவத்திற்கு பதில் சொல்ல வேண்டி நடந்தவற்றை கூறினேன்.அவர்களுக்குக் நம்பிக்கை வரவிலை.அது எப்புடி டா ஒரே கனவு உனக்கு வருகிறது என்று வினவினார்கள்.அவர்களுக்கு என்னால் புரிய வைக்க முடைவில்லை.சரி இரவு நேரங்களில் தூக்கத்தை கெடுக்காமல் ஒழுங்கா தூங்கு என்று சொன்னார்கள்.அன்று இரவும் நடந்ததி அனைத்தயும் எழுதினேன்.காலை ஆறு மணிகெல்லாம் மரத்தை நோக்கி புறப்பட்டுவிட்டேன்.அனால் எனக்கு தூக்கம் வரவில்லை.கண்கள் வெகு நேரம் மூடி இருந்தும் எனக்கு தூக்கம் வரவில்லை.எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.ஒருவழியாக சிறிது நேரத்திற்கு பிறகு தூக்கம் வந்ஹது. விழித்த போது .அப்போது நான் காட்டை விட்டு வெளியில் இருந்தேன்.மரங்கள் இல்லாமல் சம பரப்பாக இருந்தது.அப்போது அந்த கட்சியை பார்த்தேன், கூட்டம் கூட்டமாக கல் ஆயுதங்களையும் யானையின் எலும்புகளையும் ஆயுதம் ஆக்கி கொண்டு ஓடி வந்தார்கள்.அரண்மனை போன்று ஒன்று காட்சி அளித்தது.அதை நோக்கியே அந்த கூட்டமும் ஓடியது.எதிர் முனையில் இரும்பினால் ஆனா ஆயுதங்களுடன் மாட்டின் மீது சவாரி செய்து வந்தார்கள். இரண்டு கூட்டமும் சரிக்கு சமமமாக இருந்தது.அவர்களில் இருந்து காட்டை விட்டு நில பரப்பிற்கு சென்றவர்கள் தான் அவர்களும்.காட்டில் வாழ்ந்தவர்களை விட இவர்கள் ஆரோக்யத்தில் சற்றுகுறைவாக இருந்தார்கள்.சற்று நேர்த்தில் போர் ஆரம்பித்தது.இரண்டு கூடமும் ஒருவரை ஒருவர் ஆக்ரோசமாக தாக்கி கொண்டார்கள்.எங்கும் ரத்த வெள்ளமானது.அந்த போரை பார்த்து மிரண்டு விட்டேன்.காட்டில் இருப்பவர்கள் அவர்களை பிரித்து மேய்ந்தார்கள்.பலரை கொன்று குவித்தார்கள்.வெகுநேரமாக நடந்த போரில் காட்டில் வசிப்பவர்கள் வெற்றி பெற்றார்கள்.அங்கு இருந்த மீதம் உள்ளவர்களை அந்த இடத்தை விட்டு விரட்டி அடித்தார்கள்.பிறகு அந்த இடத்தில் இருந்தவர்கள் காட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டில் வசித்த அனைவரும் அந்த அரண்மனைக்கு வந்து குடியேறினார்கள்.அந்த இடம் அவர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது.தண்ணீர் சேகரிக்க கிணறுகள் அமைக்க பட்டு இருந்தது.மண் பானை சட்டிகளும் கின்னங்களும் அங்கு இருந்தது.அவர்களின் நாகரீக வளர்ச்சி முற்றிலும் மாறி இருந்தது.தான் வசிக்கும் இடங்களை சுற்றிலும் பாதுகாப்பு அரண் அமைக்க பட்திருந்தது.நாய்களை பழக்கம் செய்து வைத்திருந்தனர்.அவர்கள் பயிர்கள் வளர்த்து இருந்தார்கள்.இதை போன்று நிறைய வசதிகள் அங்கு இருந்தது.இரவை தொட்டது.அன்று இரவு அந்த அரண்மனையில் தூங்க வாய்ப்பு கிடைத்தது .கண்கள் மூடினேன். மரத்தடியில் இருந்தேன் கனவில் நடந்ததை எழுதினேன்.இந்த புத்தகத்தில் பல பக்கங்கள் நிறைந்து விட்டது.அன்றும் தூங்காமல் மறுநாள் காலையில் மரத்தடிக்கு சென்றேன். கண்கள் மூடினேன்…. மீண்டும் கனவு வந்தது.. எழுதினேன்.. அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி மு.வேல்முருகன்


கருத்துகள்