இஸ்லாமியர்கள் செல்லும் தற்காவிற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் உண்டா
கேள்வியை படித்தவுடன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்
என்ற அரபிக் வார்த்தைக்கு இறைவன் ஒருவனே அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முகமது நபிகள் நாயகம் அவருடைய இறைதூதுவர் இதுவே இதன் அர்த்தம்.
இஸ்லாமியர்க்குரிய முக்கிய அம்சமே இதுவாகும்.
இதை விட்டுவிட்டு தர்கா எனும் பெயரில் வணங்கக்கூடிய எந்த ஒரு ஆத்மாவையும் இஸ்லாம் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை.
இந்து மக்கள் தங்கள் முன்னோர்களை குலதெய்வமாக வணங்கக்கூடிய ஒன்றைத்தான் இஸ்லாமிய மக்கள் தங்கள் முன்னோர்களை தர்கா வழிபாட்டின் மூலம் வணங்கி வருகிறார்கள்.
உண்மையில் தர்காவில் வழிபடக்கூடிய சமாதிகளுக்கு சக்தி இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை.
அவர்களை வைத்து உண்டியல் காசுகளை எடுத்துக் கொள்வது இவன் பிரதான மூலதனமாக உள்ளது.
சமாதிக்கு மேல் பச்சை துணியை போட்டுவிட்டு அருகில் பத்தியை பொருத்திவிட்டு ஒரு உண்டியல் காசு சேர்க்கக்கூடிய பாத்திரத்தையும் வைத்து விடுகிறார்கள்.
அதை ஏ ஆர் ரகுமான் போன்ற நபர்கள் தங்களின் கடவுளாக வணங்கிக் கொள்கின்றார்கள்.
இது இஸ்லாமிய மார்க்கத்தின் படி இணை வைக்கும் செயலாகும்.
இறைவன் தனக்கு இணை வைப்பதையே பெரிய பாவச் செயலாக கூறுகின்றான்.
உண்மையில் இஸ்லாத்திற்கும் தர்கா வழிபாட்டுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் என்னை என்னது சமாதியை வழிபடக்கூடாது, என்றும் எனது முகங்களை வரைய கூடாது என்றும் எனக்கு சிலைகள் எழுப்பக் கூடாது என்றும்,தன்னை பின்பற்றுவர்களுக்கு கூறியிருந்தார்கள்.
ஏனென்றால் ஈஸா நபி போல தன்னையும் கடவுளாக ஆக்கிவிடுவார், என்று இதை கூறியிருந்தார்கள்.
இறைவனின் தூதுவரே மனிதன் என்றால் அவன் படைத்த ஒவ்வொரு மனிதர்களும் மனிதர்கள் தான். அவர்களை இறைவனின் தத்துவத்திற்கு ஏற்ப நாம் வணங்கக்கூடாது.
ஆகவே தர்கா வழிபாட்டில் இருக்கக்கூடியவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள்.
அவர்கள் நேர்வழி பெறுவதற்கு மேலே கூறிய லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற வசனத்தை தங்கள் மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாகூர் தர்கா போன்ற இடங்களில், அவர்களுக்கு கல்லா கட்டுவதை விட உங்கள் கண் முன்னே இருக்கும் ஏழைகளுக்கு உணவளியுங்கள்.
அவர்களை நம்பி எந்த ஒரு மூட பழக்கவழக்கத்தையும் மேற்கொள்ளாதீர்கள்.
இறைவன் ஒருவனே அவன் அல்லாஹ் அவன் எந்த தேவைகளையும் அற்றவன் அவன் பெறவும் இல்லை பெறப்படவும் இல்லை.
இறைவன் திருக்குர்ஆன் வழியாக கூறக்கூடிய இந்த வார்த்தைகளை பின்பற்றி ஒவ்வொரு மனிதனும் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் படி தமிழ் சேனல் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

கருத்துகள்