இந்து மக்கள் காகத்தினை முன்னோர்கள் என்று எண்ணி வருகிறார்கள்.

 காகத்தின் சகுனம் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.



உடனே அதில் உள்ள பயன்கள் என்ன பலன்கள் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு கிடையாது.

அதில் இருக்கக்கூடிய உண்மை தன்மையை அறிவதற்காக தான் இந்த பதிவு.

எந்த ஒன்றையும் இறைவன் வீணுக்காக படைக்கவில்லை.

காகம் என்ற பறவையானது காட்டுப் பகுதியில் வாழ்வது கிடையாது அது வீட்டில் வாழக்கூடிய கிராமங்களில் வாழக்கூடிய மனிதர்களுடன் வாழக்கூடிய ஒரு பறவையாக காணப்படுகிறது.

சைவமும் அசைவமும் சேர்ந்து சாப்பிடக் கூடிய ஒரு பறவையாக காகம் இருக்கின்றது.

காக்கை கூட்டத்திலிருந்து அதனுடைய ஒற்றுமையை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அதே நேரத்தில் அவை புத்தி கூர்மையுள்ள ஒரு பறவையாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது.

இந்து மக்கள் காகத்தினை முன்னோர்கள் என்று எண்ணி வருகிறார்கள்.

தாங்கள் வீட்டில் சமைத்த பொருட்களை காகத்திற்கு வைத்துவிட்டு அதன் பிறகு சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தம் முன்னோர்கள் என்று விவேக் பட காமெடிகளிலும் கூட நாம் பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் காகத்திற்கு உணவு வைப்பது என்பது அந்த உணவில் ஏதும் விஷத்தன்மை கலந்து இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதற்காகவே முதலில் காகத்திற்கு உணவு அளித்துவிட்டு அதன் பிறகு மக்கள் சாப்பிடுகிறார்கள்.

இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்

காகம் தலைக்கு மேல் பறந்தால் என்ன பலன்? காகம் தலையை கொத்திச் சென்றாள் என்ன பலன்? காகம் கையில் கொத்தி சென்றால் என்ன பலன்? காகம் இடமிருந்து வலம் சென்றால் என்ன பலன்? வலம் இருந்து இடம் சென்றால் என்ன பலன்? என்று அனைவரும் கேட்கப்படக்கூடிய கேள்வியாக இருக்கிறது.

ஆனால் இது போன்ற செயலுக்கு எந்த ஒரு பலனும் கிடையாது.

காகத்தின் குஞ்சுகளுக்கு அதன் கூட்டிற்கோ ஏதாவது தீங்கு செய்தால் நிச்சயமாக காகம் உங்கள் தலையை கொத்த வருகின்றது. உங்கள் மேல் அநேக கோபத்தில் இருக்கிறது என்பதே இதற்கான உண்மையான அர்த்தம்.

மேலும் உணவு தேடுவதற்காக அங்கும் இங்கும் பறக்கும் பறவையாக காகம் காணப்படுகிறது.

இதில் எந்த ஒரு ஜாதக ரீதியான பலமும் கிடையாது. இந்துக்கள் பெரும்பாலும் காகத்தினை சனீஸ்வரன் உடைய வாகனமாக கூறுகின்றார்கள். எனவே இது போன்ற சம்பவங்கள் நடந்தால் ஏழரைச் சனி எட்டரை சனி 9 1/2 சனி என்று முடித்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

உண்மையில் அப்படி எந்த ஒன்றும் கிடையாது. அதைப் பற்றிய கவலைகளும் நாம் படத் தேவையில்லை. காகம் அதன் வேலையை அது செய்து கொண்டிருக்கிறது இடையில் நாம் அதன் செயலை சகுனம் என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் மிகப்பெரிய மடத்தன்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே காகத்தினால் ஏற்படும் பலனை நாம் தெரிந்து கொள்வதை காட்டிலும் அதைப் பற்றிய எந்த ஒரு செயலை நாம் செய்யக்கூடாது என்பதை என்னுடைய தமிழ் தேனி சேனல் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். காகத்தின் சகுனம் பார்ப்பது என்பது மடத்தன்மை..

நன்றி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்