ஜான் சீனாவும் ரேண்டி ஆர்டன் உம் சண்டை 🤼 போடுவது உண்மைதானா?

 

சாம்பியன் பட்டம் பெறுவதற்காக அடித்துக்கொள்வது தான் இவர்களது வேலை. ஆனால் அப்படி அடித்துக்கொள்வது உண்மைதானா? இல்லை தயார் செய்யப்பட்டதா? என்று தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.

உலகத்தில் பல ரசிகர்கள் இவர்கள் போடும் சண்டையை பார்ப்பதற்கு இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீரனை பிடிக்கும். எடுத்துக்காட்டாக ராக் ,ஜான் சீனா ,அண்டர்டேக்கர், ட்ரிபிள் ஹெச் போன்ற வீரர்கள் அதில் சண்டை போடுகின்றனர்.

இவர்கள் அரங்கத்திற்குள் நுழையும் முன்பு வெவ்வேறு விதமான நடை உடைகளில் வருவார்கள். அரங்கத்தில் இருக்கும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருப்பார்கள். இரண்டு பேராக மூன்று பேராக நான்கு பேராக என்று அதில் சண்டை போட்டுக்கொள்வார்கள். எதிரியின் முதுகு தரையில் பட்டிருக்கும் போது மூன்று முறை நடுவர் தட்டிவிட்டாள், அவர் வெற்றி பெற்றார் என்று அர்த்தம். சில நேரங்களில் இந்த சண்டைகள் ரத்தம் வருமளவிற்கு பயங்கரமாக இருக்கும். 

சுற்றியுள்ள பொருட்களைக் கொண்டு அவர்களைத் தாக்குவது நம்மை ரசிக்க வைக்கும். ரசிகர்கள் யார் வெற்றி பெறுவார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அதற்கும் மாறுதலான வெற்றிதான் அங்கே கிடைக்கும். ஏனென்றால் இவை அனைத்தும் முன்பே தயார் செய்யப்பட்டவை. அதாவது ஸ்கிரிப்டட் சப்ஜெக்ட் என்று சொல்வார்கள். யார் வெற்றி பெறவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானிப்பார்கள். அவர்கள் பெறும் பயிற்சி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால் தான் அவர்களால் அந்த அரங்கில் சண்டை போட முடிகிறது. அவர்களுடைய ஃபேவரட் சண்டைகளைப் போடுவார்கள். ஒரு சிறிய குமுளியில் ரத்தம் இருக்கும். அந்த ரத்தத்தை வாயிலோ அல்லது அவர்களது சாக்ஸ் வைத்திருப்பார்கள். தீவிரமான சண்டையின் போது இதை எடுத்து அவள் மூஞ்சியில் உடைத்து விடுவார்கள். அப்போது அதில் உள்ள ரத்தம் நமக்கு ஒரிஜினலாக காட்டப்படுகிறது. காயமில்லாமல் அவர் முகம் முழுவதும் ரத்தமாக இருக்கும். இப்படித்தான் இவர்கள் போடக்கூடிய சண்டைகள் தயார் செய்யப்படுகிறது. அவர்கள் இதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வேலையை செய்கின்றார்கள். இவற்றையெல்லாம் இவர்கள் உண்மை போல காமிப்பது தான் இவர்களது வேலை. எனவே இதுபோன்ற சண்டைகளைப் பார்ப்பதை விட்டும் நற்செயலை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்