வீடுகளின் பாதுகாவலர்கள் தெரு நாய்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நாயைப் போல் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் சொல்வார்கள்.
உண்மையில் ஒரு நாய்க்கு நீங்கள் உணவு வைத்தால் உங்களுடன் அது வாலாட்டிக் கொண்டு மிகவும் நன்றியுடன் இருப்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.
தெரு நாய்கள் நமக்கு எவ்வாறு உதவுகின்றது என்பதை பார்ப்போம்.
ஆதி காலத்தில் இருந்து நாய்கள் மனிதனுக்கு மிகவும் உதவிகரமான ஒன்றாகவே இருந்து வருகிறது.
மனிதன் வேட்டையாடுவதற்கும் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும் நாயை ஆதி காலத்தில் இருந்து இன்று வரை வளர்த்து வருகின்றான்.
அப்படிப்பட்ட நாய் ஆனது ஒரு மிகப்பெரிய சிங்கத்தையே எதிர்க்கக்கூடிய வலிமை கொண்டது.
எதிரில் சிங்கம் இருக்கிறது நாம் பயந்து போக வேண்டும் என்று நாய் எப்போதும் நினைப்பதில்லை. எதிரில் யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தில் இருப்பது தான் நாய்கள். மனிதர்களோடு பழகி வரும் நாய்கள் தங்களை தெரிந்து கொண்ட மனிதர்களை மட்டுமே குறைப்பது கிடையாது. வேற யாராவது அவர்கள் இருக்கும் அந்த இடத்திற்கு வந்து விட்டால் நிச்சயமாக அது குறைகின்றது. இரவு நேரங்களில் திருடர்கள் இடத்திலிருந்தும் நாய்கள் நம்மை பாதுகாத்து வருகிறது.
ஆடு மாடு வைத்திருப்பவர்கள் துணைக்காக ஒரு நாயையும் வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே.
நிச்சயமாக அப்படி வைக்கப்பட்ட நாய் ஆனது அவர்களின் ஆடு மாடுகளை உறுதியாக பாதுகாத்து வருகின்றது.
நாம் போடும் உணவிற்காக நம்மையும் பாதுகாத்து நம் உடமைகளையும் பாதுகாத்து வருவது தான் இந்த நாய்கள்.
மனிதர்கள் ஒரு இடத்தில் ஆட்சி அதிகாரம் செய்வதை போல நாய்களும் தன்னுடைய இடத்தில் ஆட்சி அதிகாரம் செய்து வருகின்றது. தங்கள் இடத்தில் வேறு ஒரு நாய்களை விடுவது கிடையாது. அங்கே கிடைக்கக்கூடிய உணவுகளை நாங்கள் மட்டுமே உண்ண வேண்டும் என்ற அடிப்படை தத்துவத்தைக் கொண்டது இந்த நாய்கள்.
சிலர் வீடுகளிலும் தங்கள் நாய்களை வளர்த்து வருகின்றார்கள். அதே நேரத்தில் தெரு நாய்கள் என்று சொல்லப்படக்கூடிய நாய்களும் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றன.
இப்படி மனிதர்களைப் பாதுகாத்து வரக்கூடிய இந்த நாய்களுக்கு நாம் தேவையான நேரங்களில் உணவு வைத்து பராமரிப்பது என்பது கட்டாயமான விஷயமாகும்.
ஆதி காலத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் நாய்கள் நமக்கு உதவியாகவே இருந்து வருகிறது அதே நேரத்தில் காவல் துறையிலும் நாய்கள் மிக பங்கு வகிக்கின்றது.
நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருக்கும் காரணத்தினால் காவல்துறையினர் நாய்களை வைத்து திருடிய இடம் மற்றும் சம்பவம் நடந்த இடங்களில் தன்னுடைய மோப்ப சக்தியின் உதவியின் மூலமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவி செய்கின்றது.
அப்படிப்பட்ட மனித வாழ்வில் கலந்து இருக்கக்கூடிய இது போன்ற நாய்களுக்கு நாம் அவ்வப்போது உணவளித்து அதை பராமரித்து வரவேண்டும் என்பதே நம்முடைய தமிழ் தேனி சேனலின் வாயிலாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.

கருத்துகள்