ஆன்லைன் சூதாட்டத்தில் உள்ள முடிச்சுகள் இங்கே அவிழ்க்கப்படுகிறது
இன்றைய காலகட்டத்தில் நம் மொபைலை திறந்தாலே போதும் பல்வேறு விதமான ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன.
பல்வேறு நபர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவமும் அரங்கேறி உள்ளது.அவற்றில் சில முக்கியமானவற்றை இங்கே விளக்குகிறேன்:
நிதி இழப்பு
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நீங்கள் அதிகமான பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. இது ஜுவாமிலான விளையாட்டாக இருக்கிறது, அதனால் தானே இழப்புகள் ஏற்படும். தொடர்ச்சியான பண இழப்புகள், நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.
அல்காரிதம்
யார் எப்போது எந்த நேரத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற அல்காரிதத்தை முன்கூட்டியே தீர்மானித்து வைத்து விடுகிறார்கள். முதலில் ஆடும் இரண்டு ஆட்டங்கள் வெற்றி பெறுவது போலும் அடுத்தடுத்து வரக்கூடிய ஆட்டங்கள் தங்கள் பணத்தை இழப்பது போலும் அந்த அல்காரிதம் செயல்படுகிறது.
சில ரம்மி தளங்களில், விளையாட்டு அல்காரிதங்களை மாற்றி வைத்து வெற்றியைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்புகளை உண்டு பண்ணும். இது சமமான போட்டியல்லாமல், சில பக்கங்களில் மட்டுமே அதிக வெற்றிகளை தருவதாக உள்ளது.
அளவுக்கு அதிகமான மூழ்கல்
அதாவது அடிக்சன் என சொல்ல கூடிய ஆன்லைன் ரம்மியில் நீண்ட நேரம் மூழ்கி விளையாடுவதால், உங்கள் நேரம், பணம், மற்றும் மன நலனில் பாதிப்பு ஏற்படக்கூடும். சிலர் மனநோய் அல்லது ஆழமான நிதி பிரச்சினைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். ரம்மி விளையாடுவதற்காக நண்பர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் மனைவியிடம் பெற்றோரிடம் இருந்து பணத்தை பெற்று செல்கிறார்கள். ஒரு கட்டத்தில் மொத்த பணத்தையும் இந்த ஆன்லைன் விளையாட்டில் இழந்து விடுகிறார்கள்.
வஞ்சக செயல்கள்
சில போலி அல்லது அனுமதியற்ற தளங்கள் உங்கள் பணத்தை திருடலாம். இவ்வகை தளங்கள் உண்மையானதாக தோன்றும், ஆனால் ஒரு முறை நீங்கள் பணம் செலுத்திய பிறகு, தளம் மறைந்து விடும் அல்லது பணத்தை திரும்பப் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இப்படியான செயல் மூலம் என்னுடைய நண்பர் இடத்திலிருந்து 7 லட்சம் ரூபாயை சுருட்டி விட்டார்கள்.
தகவல் பாதுகாப்பு சிக்கல்கள்
நீங்கள் பணம் போடாவிட்டாலும் உங்கள் விவரங்களைக் கொண்டு
உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்கள் பேங்க் விவரங்கள், கடன் அட்டையின் தகவல்கள் போன்றவை மூலமாக உங்கள் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
கட்டுப்பாடற்ற விளையாட்டு
சிலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை அடிக்கடி விளையாடி, பணத்தையும் நேரத்தையும் நிர்வகிக்க முடியாத நிலைக்கு ஆழமாகச் செல்லக்கூடும். இது அவர்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்தும்.
பாதுகாப்பு வழிகள்
உங்கள் குழந்தையின் மீதும் உங்கள் மனைவியின் மீது சத்தியம் செய்து கொள்ளுங்கள் இனிமேல் நான் சூதாட்டத்தை விளையாட மாட்டேன் என்று.
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் அல்லது சம்பளம் போட்டால் உடனே அதை உங்கள் நன்மைக்காக பாடுபடும் ஒருவரிடம் அனுப்பி விடுங்கள்.
யாரிடமும் கடன் வாங்க கூடாது என்ற உறுதி எடுக்க வேண்டும்.
தனிமையில் இருப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

கருத்துகள்