குழந்தைகள் விரும்பும்சாக்லேட் மரத்தில் இருந்து காய்க்கிறதா?
சாக்லேட் எந்த மரத்தில் இருந்து கிடைக்கிறது என்று கேட்டவுடன் சாக்லேட் மரத்தில் இருந்து காய்க்கிறதா? என்று யோசிப்பீர்கள். சிலருக்கு இதன் பதில் தெரிந்திருக்கும் ஆனால் பலருக்கு இந்த பதில் தெரிவதில்லை. சாக்லேட் என்பது கொக்கோ மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பழத்தில் தான் கிடைக்கிறது. நீங்கள் படத்தில் பார்க்கும் இவைதான் கோகோ பீன்ஸ்.
நன்கு வளர்ந்த பிறகு அவற்றை உடைத்துப் பார்த்தால் உள்ளே விதைகள் இருக்கும். அந்த விதைகளை தான் கோகோ பீன்ஸ் என்று சொல்வார்கள். முதலில் இந்த விதை கசக்கத்தான் செய்கிறது.
பின்பு அதை உலர வைத்து அந்த விதையை அரைத்து அதனுள் சேர்க்கப்படும் அனைத்து கலவைகளையும் கலந்து மிதமான சூட்டில் அரைத்து கொண்டே இருப்பார்கள். அதில் இருந்து கிடைப்பது தான் இந்த சாக்லேட். வெள்ளை நிறத்திலும் சாக்லேட் காணப்படுகிறது. ஆரம்ப காலகட்டங்களில் இதை வைத்து பானம் தயாரித்து கொடுத்தார்கள். அந்த பானம் ஒருநாள் நாம் சாப்பிடக்கூடிய சாக்லேட் ஆக மாறி இருந்தது.
அதன் பிறகுதான் சாக்லேட் எல்லோராலும் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் தான் இந்த மரத்தை பயிர் செய்தனர். இப்போது மேற்கு ஆப்பிரிக்காவில் தான் 60 சதவிகித கோகோ மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த சாக்லேட்டுகள் ஈஸ்டர் தினங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் கொடைக்கானல் ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் அதிகமான சாக்லேட் ஃபேக்டரி களில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
இன்று அனேகர் சாப்பிடக்கூடிய இந்த சாக்லேட்டிற்கு மூலப்பொருள் இந்த கோகோ மரம் தான்.
ஆம் சாக்லேட் மரத்திலிருந்து தான் காய்கிறது.

கருத்துகள்