சித்தர்கள் கூறிய அம்மான் பச்சரிசி மூலிகை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அல்சரையும் குணப்படுத்தும் அம்மான் பச்சரிசி

பச்சரிசி என்றவுடன் ஏதோ அரிசியின் பெயர் என்று நினைத்து விடாதீர்கள்.

இந்த அம்மான் பச்சரிசி செடியில் கீழே படத்தில் உள்ளது போல்ஒரு பூ முளைக்கின்றது.


அந்தப் பூவினை மென்று சாப்பிடும் போது குருணையாக இருக்கக்கூடிய பச்சரிசியை சாப்பிடுவது போல் இருக்கும். தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் அரிய மருந்துகளில் ஒன்றான காரணத்தினால் தாயை நினைக்கும் பொருத்தம் அம்மான் என்ற பெயரையும் கொண்டு அம்மான் பச்சரிசி என பெயர் வந்தது.

இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அமைந்துள்ளன.

வாய்ப்புண் குணமாக எதற்கும் வயிற்றில் உள்ள புண்கள் குணமாவதற்கும் முகத்தில் உள்ள பருக்கள் போக்குவதற்கும் இன்னும் சில மருத்துவ உதவிகளை இந்த மூலிகை தருகிறது.

இந்த அம்மான் பச்சரிசி மூலிகைக்கு சித்திர வல்லாதி சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு. வாயில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கு இந்த செடியில் இருக்கும் அந்த பூக்களை மென்று தின்றால் அதில் சுரக்கும் பாலானது அந்த புண்ணை குணமாக்குகிறது.

அல்சர் என்று சொல்லப்படக்கூடிய நோயினை குணப்படுத்துவதற்கு மிகப்பெரிய மூலிகையாக அகத்தியர் பெருமானே தனது பாடல்கள் வாயிலாக இந்த அம்மான் பச்சரிசி மூலிகையை பற்றி சொல்லி இருக்கிறார்.

அதேபோல் ஆஸ்துமா பிரச்சனைக்கும் இது மூலிகையாக இருப்பதால் இந்த அம்மான் பச்சரிசி செடியை ஆஸ்துமா செடி என்றும் அழைக்கிறார்கள்.

கிராமப்புறங்களிலும் வயல்வெளிகளிலும் காடு கரைகளிலும் இந்த அம்மான் பச்சரிசி செடியை அதிகளவில் பார்க்க முடிகிறது.

மேலும் எந்த ஒரு மூலிகையை நாம் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை அணுகுவதுடன் அவரின் ஆலோசனைக்குப் பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.



என்னுடைய விவசாயத்தில் சில கருத்துக்களை உங்களுக்காக முன் வைக்கின்றேன். எனக்கும் அல்சரின் காரணமாக தொடர்ந்து வயிற்றில் வலி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு சில நாட்கள் இந்த மூலிகையை பறித்து அதனை சுத்தம் செய்து நன்றாக மென்று தின்றேன்.

சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய வயிற்று வலி இப்போது நிச்சயமாக இல்லை.

இதை நான் உணர்வுபூர்வமாக அறிந்திருக்கின்றேன்.

இந்த அம்மான் பச்சரிசி மூலிகை பயன்படுத்தியதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் எனக்கு ஏற்படவில்லை. இது ஒரு சிறந்த மூலிகை என்று தமிழ் தேனி வாயிலாக உங்களுக்கு கூறிக் கொள்கிறேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்