அனிதாவிற்கு CAMBUS INTERVIEW மூலம் பெரிய நிறுவனமான GOOGLE ல் வேலை கிடைத்திருந்தது.
உருவம்
கதை
பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டு மாணவர்கள் ECE இறுதி ஆண்டு படித்துவந்தார்கள். இதில் ஒருவன் வசதியானவன்(வேலு). மற்றொருவன் வசதி அற்றவன்(பாண்டி). அண்னன் (பாண்டி) தம்பி (வேலு) போல இவர்கள் பழகினார்கள். இருவரும் உலக நாயகன் கமலஹாசன் உடைய தீவிர ரசிகர்கள்.கமல் படத்திற்கு முதல் ஷோவாக இருப்பார்கள்.
பாண்டி அதே கல்லூரியில் ECE படிக்கும் அனிதாவை விரும்பினான்.அனிதாவும் அவனை விரும்பினாள். அனிதாவிற்கு CAMBUS INTERVIEW மூலம் பெரிய நிறுவனமான GOOGLE ல் வேலை கிடைத்திருந்தது.இவள் அனாதை ஆசிரமத்தில் இருந்து டிரஸ்ட் உதவியோடு படித்துவந்தாள்.
பாண்டி வேலுவுடன், பழகுவதும் சுத்துவதும் அனிதாவிற்கு பிடிக்காது. படிப்பை தவிர்த்து படத்திற்கு அழைத்து செல்வதால். ஆனாலும் இருவருமே வேண்டும் என்பதில் பாண்டி உறுதியாக இருப்பான்.இது வேலுவிற்கு கோபம் வந்தாலும் அண்ணனின் காதலி என்ற மரியாதையோடு இருப்பான்.
வேலு ஒரு பெண்ணை(ரஞ்சனி) ஒரு தலையாக காதலித்து வந்தான். அவளும் காதலித்தால், அவனுக்கு சொல்லாமலும் தெரியாமலும்.
ரஞ்சனி அமெரிக்காவில் மருத்துவ படிப்பை முடித்து விட்டு பிரபலமான மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தாள். அதே மருத்துவமனையில் தான் வேலுவை பார்த்தாள். வேலுவின் குறும்பு தனமும் குழந்தை பேச்சும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது .வேலு அவளை பார்க்கும் போதெல்லாம் தன் காதலை வெளிபடுத்தி கொண்டிருந்தான்.
வேலு,பாண்டிக்கு எதிரிகளாக MECHANICAL STUDENTS சிலர் இருந்தார்கள்.கபடி விளையாட்டு மூலம் இவர்கள் விரோதம் வளர்த்து கொண்டனர்.அதனால் பார்க்கும் இடங்களில் மோதி கொள்வார்கள்.
அனிதா ஒருமுறை பாண்டியுடன் தன் ஆசிரமத்திற்கு மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையின் பிறந்தநாளுக்கு அழைத்து சென்றாள். பெற்றோர் அற்ற குழந்தைகள் மத்தியில் அந்த பிறந்தநாள் விழா நடந்தது.அரவணைக்க அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்க வேண்டும் என்பது அவளின் ஆசை.அவளின் விருப்பத்தை பாண்டியும் ஒப்புகொண்டான்.
அன்று கல்லூரியில் FARAWEL FUNCTION நடந்தது. வேலுவும் பாண்டியும் கமலகாசன் MIX பாடல்களுக்கு ஆட்டம் போட்டு அனைவரையும் ஆரவார படுத்தினார்கள். அனிதா நட்பிற்கான பாடல் ஒன்றை படித்தாள்[friendship song].பாடல் முடிந்து திடீர் என்று அவள் மயங்கி விழுந்தாள்.
உடனே மாணவர்கள் அவளை மருத்துவமனைகக்கு கொண்டு சென்றனர்.அங்கு ஒரு அதிர்ச்சி செய்தி. இவள் பிழைக்கமாட்டாள் என்று.இதை கேட்ட பாண்டி அதிர்ச்சி அடைந்தான். ஆசிரமத்தில் இருந்து காப்பக அம்மையாரும் குழந்தைகளும் வந்துவிட்டார்கள்.அப்போது அந்த அம்மையார் ஒரு ரகசியத்தை பாண்டியிடம் சொன்னார். அனிதாவின் பெற்றோர் சிறு வயதாக இருக்கும்போது ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார்கள்.இவளுக்கு இருதயத்தில் பாதிப்பு இருபதாகவும் எந்த நேரமும் உயிர் பிரியும் என்று சொன்னார்கள். எங்கள் மகள் உயிர் பிரிவதை எங்கள் கண்ணாள் பார்க்க முடியாது என்று அவளை விட்டு சென்றார்கள்.அதை கேட்ட பாண்டி ஆழ்ந்த மௌனத்திற்கு சென்றான்.அந்த குழந்தைகள் அனிதாவை பார்த்து அழுது கொண்டு இருந்தார்கள்.
பாண்டியும் வேலுவும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்கள்.பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.(feel songs )
பின்பு இருவரும் சாலையில் வருத்ததுடன் நடந்து சென்றார்கள்.அப்போது அவர்களின் எதிரிகள் உடைய சுமோ ஒன்று, வேகமாக வந்து ரோட்டில் கிடக்கும் தண்ணீரை அவர்கள் மீது அடித்து விட்டு சென்றது. சிறிது தூரம் சென்று சுமோ திடிரென நின்றது. சுமோவில் இருந்து அனைவரும் வேகமாக இறங்கினார்கள்.அப்போது ஒரு லாரி சாய்ந்த நிலையில் பாலத்தில் வந்து இடித்தது.அந்த லாரி பாண்டியையும் வேலுவையும் இடித்து விட்டுதான் விபத்துக்குளானது.அந்த mechanical students அவர்களை அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
ஆனால் விதி மீண்டும் விளையாடியது. வேலுவிற்க்கு முற்றிலும் உயிர் போகும் தருவாயிலும்,பாண்டி சிறு காயங்களுடனும் இருந்தான்.இவர்களது பெற்றோர்கள் வந்து மருத்துவமனையில் அழுது கொண்டிருந்தார்கள்.
அப்போது இவர்களது பெயர் உடல் தான பட்டியலில் பதியப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
அதனால் மருத்துவர்கள் ஒரு கலந்தாலோசனை செய்தார்கள்.இறக்கும் தருவாயில் உள்ள வேலுவின் இதயத்தை அவனின் பெற்றோர் சம்மதத்துடன் அனிதாவிற்கு பொறுத்த முடிவு செய்தார்கள்.இதை செய்து முடிக்க பெரிய மருத்தவர் ஒருவரை அழைத்தார்கள். சிறிது நேரம் கழித்து மருத்துவமனை முன்பு அவரின் கார் வந்து நின்றது.அதில் இருந்து வேலுவின் காதலி இறங்கி வந்தாள்.அவள் வருவதற்குள் ஆபரேஷன்க்கு தேவையான அணைத்து வேலைகளும் நடந்து, மற்ற பகுதி மறைக்கப்பட்டு இதய பகுதி மட்டும் தெரிந்துகொண்டிருந்தது. அங்கு மருத்துவர்கள் நேரமின்மையை கருத்தில் கொண்டு வேகமாக முடிக்கும்படி ரஞ்சனியிடம் கூறினார்கள்.அவள் தன் காதலன் என்று தெரியாமல், வேலுவின் நெஞ்சில் கத்தியை கொண்டு கிழித்து இதயத்தை வெளியில் எடுத்து நீரில் போட்டாள்.பின்பு அதே வேகத்துடன் அந்த இதயத்தை அனிதாவிற்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தார்கள். பின்புதான் தெரிய வந்தது அது வேலுவின் இதயம் என்று.[அனிதா வேலுவை, முதல் முறையாக மருத்துவமனையில் பார்க்கும் போது உடல்தானம் செய்வதற்குதான் வேலுவும் பாண்டியும் வந்து இருந்தார்கள். கமல், உடல் தானம் செய்திருப்பதால் அவர்களும் அதை செய்திருந்தார்கள்.] உடனே ரஞ்சனி கதறி அழுதாள்.அதை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
ஒரு மாதத்திற்கு பிறகு,
ரஞ்சனிக்கு திருமண எற்பாடு நடந்தது.ஆனால் அதை ரஞ்சனியால் எற்று கொள்ள முடியவில்லை.தன் பெற்றோரிடம் என் மனதில் ஒருவருக்குதான் இடம் என்று கூறி கன்னியாஸ்திரி ஆகிவிடுகிறாள்.எனெனில் அவள் ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவள்.
ஆனாலும் வேலு இறக்கவில்லை.தானும் துடித்து தன் நட்பையும் நட்பின் காதலையும் துடிக்க வைத்து கொண்டிருந்தான்.
பிற்காலத்தில் பாண்டியும் அனிதாவும் வேலுவின் நினைவோடு ஆனதை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு தாய் தந்தையாக இருந்தனர்.
ரஞ்சனியும் வேலுவின் நினைவோடு இலவச மருத்துவ உதவிகளை செய்து வந்தாள்.
திரைகாவியன்
மு.வேல்முருகன்

கருத்துகள்